Oslo Launch Report

image_pdfimage_print

Some good photos and a brief report (in Tamil) by Sarawanan Nadarasa from Monday’s  launch at the Peace Research Institute Oslo (PRIO), Oslo for To End a Civil War: Norway’s Peace Engagement with Sri Lanka.

"Iselin Frydenlund (Senior researcher, PRIO), Anne Julie Semb (Professor, University of Oslo)"
  • Anne Julie Semb, Professor, University of Oslo
  • Iselin Frydenlund, Senior researcher, PRIO
"Erik Solheim"
Erik Solheim (former Norwegian Development Minister and Special Envoy to Sri Lanka)
"Mark Salter (Author), Erik Solheim"
Mark Salter (Author) and Erik Solheim
"Erik Solheim"
Erik Solheim, Iselin Frydenlund and Moderator Henrik Syse (Senior Researcher, PRIO)

—————————————

இன்று ஒஸ்லோவில் வெளியிடப்பட்ட “To End a Civil War: Norway’s Peace Engagement with Sri Lanka” என்கிற நூல் ஒரு முக்கியமான நூல். 550பக்கங்களைக் கொண்ட பல தகவல்களை உள்ளடக்கிய இந்த நூலை எழுதியவர் Mark Salter. எரிக் சுல்ஹைம்மின் நூல் ஒஸ்லோவில் வெளியிடப்படுகிறது என்கிற ஒரு புரளி இந்த சில நாட்களாக பலர் மூலம் அறியக்கிடைத்தது. இலங்கையிலிருந்தும் கூட சில ஊடக நண்பர்களும் சில ராஜதந்திரிகளும் கூட என்னோடு தொடர்புகொள்கையில் எரிக் சுல்ஹைமுடயது என்றே கூறினார்கள். நான் அவர்களுக்கு விபரங்களை அனுப்பி இல்லை என்று மறுக்கவேண்டியதாயிற்று. அப்படியான சிலர் இன்றைய கூட்டத்திற்கும் வந்திருந்தார்கள்.

நிற்க, Mark Salter இந்த நூலுக்காக கையாண்ட பல தகவல்கள்; மூலத் தகவல்களை உள்ளடக்கியது என்பதால் மிகவும் முக்கியத்துவமுடையது. குறிப்பாக எரிக் சுல்ஹைம், வீதார் ஹெல்கீசன் மற்றும் முக்கிய பலருடன் நட்புடையவர். இவர்கள் பொதுவாக ஊடகங்களுக்கு பகிரங்கமாக வெளியிடாத தகவல்கள் கூட இந்த நூலுக்காக பகிர்ந்திருப்பதை அறியக்கூடியதாக இருக்கிறது.

நூலை முழுவதும் வாசித்து முடியவில்லை ஆனால் இதில் வெளியாகிய பல தகவல்கள் இன்னும் பலவற்றை அறிவதற்கான தேவையையும், அதற்கான துணுக்குகளையும் தந்திருக்கிறது என்றே கூறலாம்.

Mark Salter யுத்தத்தின் பின்னர் எரிக் சுல்ஹைம் மற்றும் வீதார் ஹெல்கீசன் போன்றோருடன் திறந்த நேர்காணலுக்காக நான் பல முறை முயற்சித்தபோதும் அதிலிருந்து தப்பிகொண்டோ, தவிர்த்துக்கொண்டோ சென்றிருக்கிறார்கள். குறிப்பாக இலங்கை ஊடகங்கள் என்றாலே மிகுந்த எச்சரிக்கையும் பயமும் அவர்களிடத்தில் உள்ளது. எரிக் சுல்ஹைமுடன் எனக்கு இருக்கின்ற மரியாதை ஒருபோதும் வீதார் ஹெல்கீசனுடன் இருந்ததில்லை. வீதார் ஹெல்கீசன் ஒரு வலதுசாரி தேசியவாத கட்சியின் அமைச்சர் என்பதை அவரது அரசியல் அணுகுமுறையும், தனிப்பட்ட அணுகுமுறையும் எப்போதும் நிரூபித்துக்கொண்டே வந்துள்ளதை கண்டிருக்கிறேன்.

இன்றைய கூட்டத்திற்கு நோர்வேஜியர்கள் அளவுக்கு பல தமிழர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத்தந்த ஆழமான கேள்விகளை உடையவராக நான் இன்று கண்டது Iselin Frydenlund ஒரு சிறந்த நோர்வேஜிய ஆய்வாளர். குறிப்பாக பௌத்த பயங்கரவாதம், தேசியவாதம் குறித்த ஆய்வுகளில் ஆழமுள்ளவர். “இலங்கை யுத்தம் பக்கசார்பான வெற்றியை வழங்கியதில் பௌத்த மதத்தின் பாத்திரம் என்ன என்பது பற்றி சற்றும் இந்த நூல் ஆய்வு செய்யவில்லை, அதைப் பொருட்படுத்தவுமில்லை என்று பகிரங்கமாக விமர்சித்தார். நோர்வே மத்தியஸ்தர்களின் தோல்வியில் பாரிய பங்கு அதற்குண்டு என்று விமர்சித்தார். அந்த விமர்சனத்தை ஏற்றுக்கொண்ட எரிக் சுல்ஹைம் “நாங்கள் விட்ட பெருந்தவறு அது” என்று கூறியபோது முதற்தடவையாக இப்படி ஒரு சுயவிமர்சனத்தை நோர்வே தரப்பில் வெளியிட்டிருப்பதை ஆச்சரியமாகவே பார்த்தேன்.

1997-2009 காலப்பகுதியில் நோர்வேயின் சமாதான செயற்பாடுகள் குறித்து நோர்வே செய்த சுயவிசாரணையின் போது (Evaluation of Norwegian peace efforts in Sri Lanka, 1997-2009) அந்த விசாரணை குழுவின் தலைவரிடம் நான் சமாதான முயற்சியின்போது சிங்கள பௌத்த பேரினவாதம் குறித்த அசட்டையான போக்கு குறித்து பல விடயங்களை குறிப்பிட்டிருந்தேன். அப்படிப்பட்ட ஒரு பார்வையை Iselin Frydenlund வைத்திருக்கிறார். அவருடன் தனியான ஒரு பேட்டிக்கு ஒழுங்கு செய்திருக்கிறேன். Mark Salter இன்னும் சில நாட்கள் ஒஸ்லோவில் இருப்பார் அவருடனும் ஒரு நேரத்தை கேட்டிருக்கிறேன். ஒரு விரிவான குறிப்பை எழுத விரும்புகிறேன்.